கூவத்தூரில் பிரபல நடிகையை கேட்டாரா அதிமுக எம்.எல்.ஏ? பதிலடி கொடுத்த தமிழ் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் இருக்கும் போது அதிமுக எம்எல்ஏ ஒருவர் பிரபல நடிகையை கேட்டார் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் ஏவி ராஜூ. இவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் என்பவர் என்ன கூத்தாடி தார் என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் பிரபல நடிகையை கேட்டதாகவும் அதற்கு ஒரு நடிகர் தான் ஏற்பாடு செய்தார் என்றும் இதற்கெல்லாம் காசு கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் பகீர் குற்றச்சாட்டை கூறினார். இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இல்லை என்றாலும் அன்று இந்த நிகழ்வுகள் எல்லாம் நடந்தது உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ அளித்த பேட்டிக்கு தமிழ் நடிகை ஷர்மிளா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது
என்ன முட்டாள்தனமாக இந்த தோழர் இப்படி பேசுகிறார்? அவர் தனது தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சினிமாவில் பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்... ஒட்டுமொத்த மீடியாவும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு வெளியே முகாமிட்டிருந்தது... இத்தனை ஊடகத்தையும் மீறி ஒரு பிரபல நடிகையை அங்கு அழைத்துச் செல்வது எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
What nonsense is this fellow talking?
— Dr M K SHARMILA (@DrSharmila15) February 19, 2024
He is trying to tarnish the reputation of women in cinema for his personal vengeance… the entire media was camped outside Koovathur resort … how is it possible to even take a popular actress there without any media attention.
😡 https://t.co/0ChGa07KWm
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com