கோட் சூட் போட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோட் சூட் போட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தமிழக முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதும் பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதலமைச்சர் முக ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவினர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும் மற்ற அரசியல் கட்சியினர் வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையும் பதிவு செய்து வருவது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகை மற்றும் தயாரிப்பாளரும் பாஜக பிரபலபமான குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் கோட், சூட் ஷூ அணிந்து நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து இருக்கும் திருவள்ளுவர் படத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அவர், ‘ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படும் வகையில் உள்ள திருவள்ளுவர் தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுவோம் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படமும் குஷ்புவின் பதிவும் தற்போது வைரலாய் வருகிறது.
Let us celebrate every tamilian's pride, the poet celebrated by the world. #Thiruvalluvar#thiruvalluvarday pic.twitter.com/3p7ZysucBy
— KhushbuSundar (@khushsundar) January 16, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com