சன்பாத் புகைப்படங்களை பகிர்ந்து தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிகினி உடையில் தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நடிகை மௌனி ராய் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ’நாகினி’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூன்று பாகங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை மௌனி ராய். இவர் ’கேஜிஎப்’ முதல் பாகம் உள்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை மெளனிராய் தனது நெருங்கிய தோழி ரூப்பாலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அதில் பிகினி உடையில் சன்பாத் எடுத்த புகைப்படங்கள் உள்பட பல புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: 50வது மாடியில் இருந்து நீ என்னை குதிக்க சொன்னாலும் நான் உனக்காக குதிப்பேன், அந்த அளவுக்கு நான் உன்னுடைய நெருங்கிய தோழி. தீபாவளி, கிறிஸ்துமஸ், ,காதலர் தினம் என முக்கிய தினங்களில் உன்னுடன் சேர்ந்து நான் கொண்டாடி உள்ளேன். இந்த முறை உன் பிறந்த நாளுக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல முடியவில்லை, பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout