விஜய்-அஜித் நாயகிக்கு இன்று பெங்களூரில் திருமணம்
- IndiaGlitz, [Wednesday,February 03 2016]
அஜித் நடித்த 'அமராவதி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை சங்கவி, இளையதளபதி விஜய் நடித்த ஆரம்பகால திரைப்படங்களான ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, நிலாவே வா போன்ற படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை சங்கவிக்கு இன்று பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.
நடிகை சங்கவிக்கும் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை பெங்களூரில் வெங்கடேஷ்-சங்கவி திருமணம் நடைபெறுகிறது.
சங்கவி தனது திருமணம் குறித்து கூறியபோது, 'இது காதல் திருமணம் அல்ல என்றும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிக்க தனது கணவர் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இன்று மணவாழ்க்கையை தொடங்கவிருக்கும் சங்கவி-வெங்கடேஷ் தம்பதிக்கு வாழ்த்துக்கள்