விஜயகாந்த், மாதவன் பட நாயகிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்', மாதவன் நடித்த 'நான் அவள் அது' மற்றும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் தற்போது 'தி டெனட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷமிதா ஷெட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 'கடந்த திங்களன்று மும்பை அருகேயுள்ள 'தானே' பகுதியில் தான் காரில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மூவர் தன்னுடைய காரின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனை தட்டிக்கேட்ட தனது டிரைவரை தாக்கியது மட்டுமின்றி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் தன்னை காப்பாற்றியதாகவும், அதனபின்னர் மூவரும் தப்பி சென்றுவிட்டதாகவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஷமிதா ஷெட்டியும் அவருடைய டிரைவரும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் மர்ம நபர்கள் மூவரும் பிடிபடுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.