close
Choose your channels

சிங்கக்குட்டியை மடியில் உட்கார வைத்து பால் கொடுத்த பிரபல நடிகை: வீடியோ வைரல்!

Saturday, December 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகைகள் பொதுவாக நாய்க்குட்டிகளை செல்லப்பிராணியாக வளர்ப்பார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பிரபல நடிகை ஒருவர் சிங்கக் குட்டியை மடியில் உட்கார வைத்துக்கொண்டும், அதற்கு புட்டிப்பால் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை ஷாமா சிக்கந்தர். இவர் மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு சமீபத்தில் தொழிலதிபர் ஒருவருடன் துபாயில் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் குறிப்பாக பிகினி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஷாமா சிக்கந்தர் தற்போது சிங்ககுட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த சிங்கக்குட்டி அவரது மடியில உட்கார்ந்து கொண்டும், ஆடிக் கொண்டு விளையாடும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

சிங்கக்குட்டிக்கு ஷாமா சிக்கந்தர் புட்டிபால் கொடுக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிங்ககுட்டியை தான் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆசையாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment