மேக்கப்மேனால் ஏற்பட்ட பிரச்சனை, புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 12 2022]

தன்னுடன் பணிபுரிந்த மேக்கப்மேன் ஒருவரின் இன்ஸ்டாகிராமில் இருந்து வந்த மெசேஜால் ஏற்பட இருந்த பிரச்சனையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பி விட்டதாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இது குறித்து ஷாலு ஷம்மு வீடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய இன்ஸ்டாகிராமில் என்னுடன் பணிபுரிந்த மேக்கப்மேன் ஒருவருடன் நான் மெசேஜ் அனுப்பி சேட் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அவரது மெசேஜில் ஒரு லிங்க் வந்தததை பார்த்ததும் நான் சுதாரித்துக் கொண்டேன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, ஹேக் செய்தவர் லிங்க் மெசேஜ் அனுப்பி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஹேக் செய்ய முயற்சி நடந்தது என்பதை புரிந்து கொண்டேன்

ஏற்கனவே இது போன்ற அனுபவம் எனக்கு இருந்ததால் நான் சுதாரித்து அந்த மெசேஜை டெலீட் செய்து விட்டேன். இதனால் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யாமல் தப்பிவிட்டது’ என்று நடிகை ஷாலு ஷம்மு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.