க்யூட் சிஸ்டர்ஸ்… பேபி ஷாலினி- ஷாமிலி அழகிய புகைப்படம் வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை பேபி ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம்வந்தார்.
அதைத்தொடர்ந்து “காதலுக்கு மரியாதை“, “அமர்க்களம்“, “அலைபாயுதே“, “பிரியாத வரம் வேண்டும்“ போன்ற திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்திருந்தார்.பின்பு தல அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது சினிமாவைவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.
நடிகை ஷாலினியின் தங்கை பேபி ஷாமிலி “அஞ்சலி“ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து 2 வயதிலேயே தேசிய விருதையே தட்டிச்சென்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் சமீபத்தில் நடிகர் விக்ரம் பிரபுடன் இணைந்து “வீரசிவாஜி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிற அழகிய அக்கா-தங்கைகள் இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போதையே தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஷாலினி-ஷாமிலி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷாமிலி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com