ஷகிலா - ஷீத்தல் மோதல்.. சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸில் புகார்..!

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

நடிகை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நடந்ததாகவும் இந்த மோதலை சமாதானம் செய்து வைக்க வந்த பெண் வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்ச்சி வேடங்களில் நடித்த நடிகை ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்களின் மத்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஷீத்தல் என்பவரை ஷகிலா வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார் என்பதும் இருவரும் சேர்ந்து பல பேட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு ஷீத்தல் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து ஷகிலா தனது வழக்கறிஞருடன் சென்று காவல்துறையில் புகார் அளித்த நிலையில் சமாதானப்படுத்த ஷீத்தல், அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வருகை தந்ததாக தெரிகிறது. ஆனால் சமாதான பேச்சு வார்த்தையின் போது திடீரென பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதாகவும், இதில் சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.