தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த பிரபல நடிகை.. போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த திரைப்படத்தின் டிக்கெட்டுகளை தியேட்டருக்கு வந்து விற்பனை செய்த நிலையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியதால் ஒரு சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் ’ஒருநாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நிவேதா பெத்துராஜ் நடித்த ’தஸ்கா தம்கி’ என்ற திரைப்படம் இன்று வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வந்த நிவேதா பெத்துராஜ் டிக்கெட்டுகளை அவரே தனது கையால் விற்பனை செய்தார். நிவேதா டிக்கெட் விற்பனை செய்கிறார் என்ற தகவல் கிடைத்ததும் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை வாங்க முன் வந்தனர் என்பதும் ஒரு சில நிமிடங்களில் அந்த திரையரங்கில் உள்ள அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகிவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஸ்வக் சென் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார் பெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.