சொந்த கிராமத்திற்கு விசிட் அடித்த நடிகை சீதா.. க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,May 12 2023]

நடிகை சீதா தனது சொந்த கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி நடித்த ’ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சீதா. இதன் பிறகு ரஜினி நடித்த ’குரு சிஷ்யன்’ கமல்ஹாசன் நடித்த 'உன்னால் முடியும் தம்பி’ அர்ஜுன் நடித்த ’சங்கர் குரு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான ’புதிய பாதை’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்த போது தான் இயக்குனர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் 1990 ஆம் ஆண்டு பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக அம்மா கேரக்டரில் நடிகை சீதா நடித்த வருகிறார் என்பதும் கடந்தாண்டு வெளியான ’டிரிகர்’ என்ற படத்தில் கூட அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சீதா அவ்வப்போது தனது மொட்டை மாடி தோட்டத்தில் வளரும் காய்கறிகள் குறித்த வீடியோவை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது சொந்த கிராமத்திற்கு சென்று குலதெய்வம் கோவில் வழிபாடு செய்துள்ளார். அது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

இது முழுக்க முழுக்க வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்: 'இராவண கோட்டம்' படக்குழு அறிக்கை..!

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது,.

'FastX' படத்தில் பால்வாக்கர் மகள்.. இன்ஸ்டாவில் எமோஷனல் பதிவு..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தின் 10வது பாகம் 'FastX' வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நான் டேட்டிங் செய்த அனைவருமே நல்லவர்கள்: பிரியங்கா சோப்ராவின் காதலர்கள் லிஸ்ட்..!

பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு முந்தைய தனது காதல் குறித்து மலரும் நினைவுகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினி பட வில்லன் நடிகர் அறிவிப்பு..!

திரை உலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கனவே அரசியலில் இருந்து வரும் நிலையில் விஜய் உள்பட இன்னும் பல பிரபலங்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்

மறைந்த பிரபல தமிழ் நடிகரின் மனைவிக்கு 6 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' உள்பட ஒரு சில படங்களில் நடித்த பிரபல நடிகர் ரித்தீஷ் மனைவிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.