நடிகை சாயிஷாவின் அப்பா பாலிவுட்டில் பிரபல நடிகரா? இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் அப்பா பாலிவுட்டில் ஒரு பிரபல நடிகர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. சாயிஷாவின் சமூக வலைத்தள பக்கத்தில் அவருடைய தாயாரின் பல புகைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் அவருடைய தந்தை ஸ்மித் சாகில் என்பவர் பாலிவுட்டில் ஒரு பிரபல நடிகர் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் அவர் சுமார் 30 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகை சாய்ரா பானுவின் நெருங்கிய உறவினரான ஷாஹின் பானு என்பவரை ஸ்மித் ஷாகில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1997ஆம் ஆண்டு சாயிஷா என்ற மகள் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்மித் ஷாகில், சாயிஷாவின் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ஃபரா கான் என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout