த்ரிஷாவின் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

த்ரிஷாவின் காதலருடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை த்ரிஷா கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் திருமண நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து த்ரிஷா இன்னும் திருமணம் செய்யாமல் உள்ள நிலையில் த்ரிஷாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட வருண்மணியனை நடிகை பிந்து மாதவி காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் பிந்து மாதவி நடித்த ’நியூசென்ஸ்’ என்ற வெப் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த சந்திப்பின்போது வரும் த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியனை டேட்டிங் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிந்து மாதவி, ‘வருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என்றும் த்ரிஷா அவரை விட்டு பிரிந்த பிறகு தான் நான் டேட்டிங் செய்தேன் என்றும் தெரிவித்தார்.

பிந்து மாதவி நடித்துள்ள ’நியூசென்ஸ்’ என்ற தெலுங்கு வெப் தொடர் அரசியல் மற்றும் பத்திரிகை துறை கலந்த தொடராக உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த தொடர் மே 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது