அப்ப நான் 9வது தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்.. அஜித்துடன் முதல் பட அனுபவம் குறித்து பேசிய நடிகை..!

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

அஜித் நடித்த முதல் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சங்கவி என்பதும் அதன் பிறகு அவர் பல விஜய் படங்களில் நடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’அமராவதி’ திரைப்படம் அஜித்தின் பிறந்த நாளான வரும் மே 1அம் தேதி டிஜிட்டலில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சங்கவி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜீத் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ’அமராவதி’ படத்தில் நாயகி ஆக என்னை இயக்குனர் செல்வா அழைத்தபோது நான் 9ஆம் வகுப்பு தான் படித்து முடித்து இருந்தேன். எனக்கு கேமராவை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எந்த ஆங்கிளில் கேமராவை பார்க்க வேண்டும்? எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. என்னை வைத்து செல்வா உட்பட படக்குழுவினர் படாத பாடுபட்டனர். ஒரு வழியாக அந்த படத்தில் நான் நடித்து முடித்தேன். அந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

குறிப்பாக அஜித்தின் முதல் படம் தான் என்னுடைய முதல் படம் என்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இந்த படம் தற்போது டிஜிட்டலில் வெளியாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.