close
Choose your channels

கமல் கட்சியில் பதவி கேட்டேனா? பாவம் கோவை மக்கள்.. மநீக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த நடிகை..!

Monday, December 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் கமல் கட்சியில் பதவி கேட்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் அதை கொடுக்க மறுத்ததாகவும் அதனால் அந்த நடிகை மக்கள் நீதி மய்யம் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியதற்கு நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் ஒருவருமான சனம் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒருதலையாக நடத்துவதாகவும், கண்டிக்க வேண்டியவர்களை கண்டிக்காமல் ஒரு சிலருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அவரது விமர்சனத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கமல் கட்சியின் நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் 'சனம் ஷெட்டி, கமல்ஹாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு முக்கிய பதவி கேட்டதாகவும் ஆனால் கமல் அதை கொடுக்க மறுத்ததால் தான் அவர் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு ’கோவை மக்கள் பாவம்’ என்று கூறிய சனம் ஷெட்டி, ‘நீங்க ஒருத்தரே உங்க கட்சியின் குறைகளை அம்பலப்படுத்தி பேசுவதற்கு போதும். யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்பதை விசாரிங்கள்’ என்று கூறியுள்ளார். சனம் ஷெட்டியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment