இப்படி இருப்பதே நல்லது… நடிகை சாயிஷா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை சாயிஷா ஜிம்மில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு கொழுப்பில்லாமல் ஃபிட்டாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த நடனக் கலைஞராகவும் நடிகையாகவும் வலம்வரும் சாயிஷா “வனமகன்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து நடிகர் விஜய் சேதுபதியுடன “ஜுங்கா“ நடிகர் சூர்யாவுடன் “காப்பான்“ திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் “கஜினிகாந்த்“ திரைப்படத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு விரைவில் திருமணம் செய்துகொண்டார்.
தற்போது ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் நடிகை சாயிஷா பிரசவத்திற்குப் பிறகும் தனது உடலை படு ஃபிட்டாக வைத்துள்ளார். இதுகுறித்து பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைப்பது எளிதல்ல. இருப்பினும் ஒருவர் சீராகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும. மேலும் நீங்கள் கூடுதல் எடையை இழப்பது தவிர்க்க முடியாதது.
மேலும் ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த வழியில் அழகாக இருக்கிறாள். இருப்பினும் மெலிதாக இருப்பது நல்லது. ஏனெனில் இது கொழுப்பில் இருந்து நமது உறுப்புகளை விடுவிக்கிறது. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நேரம் எடுக்கும். ஒரு பிரபலத்தை பார்த்து உங்கள் இலக்கை அமைக்காதீர்கள். வெவ்வேறு உடல் ஆரோக்கிய நிலை உள்ளது. உடல்தகுதி என்பது எனக்கு ஒரு வாழ்க்கை முறை என்று பதிவிட்டு உள்ளார்.
குழந்தைப் பெற்ற பிறகும் நடிகை சாயிஷா தொடர்ந்து நடனப்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது உடல்தகுதி குறித்து அவர் தெரிவித்த இந்தக் கருத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகை சாயிஷா ஒரு கன்னடப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்றும் தகவல் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com