உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு இதுதான்: சாயிஷாவின் நெகிழ்ச்சி பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்யா - சாயிஷா தம்பதியின் மகள் குறித்த வீடியோவை முதல் முதலாக பதிவு செய்துள்ள சாயிஷா உங்கள் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய மிகப்பெரிய பரிசு இதை தவிர வேறு எதுவும் இருக்க கூடாது என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஆர்யா, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது குழந்தையின் முகம் தெரியும் வகையிலான புகைப்படத்தை முதல் முதலாக சாயிஷா பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் 2022ஆம் ஆண்டு விடைபெற்று 2023 ஆம் ஆண்டு வர இருக்கும் நிலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சாயிஷா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில் 2022 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில் எனக்கு தேவையான அனைத்தும் கொடுத்த இந்த ஆண்டை என்னால் மறக்கவே முடியாது. இந்த ஆண்டுக்கு நான் மிகவும் நன்றியுடையவராக இருப்பேன். இந்த ஆண்டு எனக்கு கொடுத்த மகிழ்ச்சியால் மனநிறைவுடன் இருந்தேன்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகச் சிறந்த பரிசு அந்த குழந்தையுடன் ஒவ்வொரு நொடியையும் செலவிடுவது தான் என்ற வகையில் நான் என் குழந்தையுடன் நீண்ட நேரம் செலவிட்டேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வேன். இந்த ஆண்டின் பயணம் எனக்கு அழகான மகிழ்ச்சியான பயணமாக இருந்தது.
மேலும் அம்மாவின் சில வேலைகள் மிகவும் சோர்வாக இருந்தாலும் நான் என் குழந்தைக்காக எதையும் மாற்ற விரும்பவில்லை. குழந்தைக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். 2023 என்ற சூப்பர் ஆண்டை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். நல்ல ஆரோக்கியம் மற்றும் நாம் விரும்பும் நபர்களுடன் அர்த்தமுள்ள ஆண்டாக இந்த ஆண்டை மாற்றுவோம்’ என்றும் நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com