பிரபல சீரியலில் களமிறங்கும் மூத்த திரைப்பட நடிகை....!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

தமிழ் திரைப்படங்களில் 80-கள் முதல் பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சத்யா. எந்த கேரக்டர் கொடுத்தாலும், அதில் தத்ரூபமாக நடிக்கக் கூடியவர். கடந்த 1974-ல் நேற்று இன்று நாளை என்ற திரைப்படம் மூலமாகத் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார். இதேபோல் கடந்த 1970-ல் பசி என்ற படத்தில், செல்லம்மா என்ற ரோலுக்கு பொருத்தமாக நடித்திருந்தார். இதன் காரணமாகவே மூத்த நடிகை பானுமதி ராமகிருஷ்ணா இவருக்கு பசி சத்யா என்ற பெயரை வைத்தார்.

இதையடுத்து சின்னத்திரையிலும் கால் பதிக்க துவங்கிய சத்யா சித்தி 1, செல்லமே, அண்ணாமலை, இளவரசி உள்ளிட்ட பல தொடர்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன்பின்பு சீரியலில் இருந்து நடிப்பதிலிருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சத்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பல வருடங்கள் கழித்து இவர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News

நான் குடித்துவிட்டு பிரச்சனை செய்தேனா? உண்மையை உடைத்த தமிழ் நடிகர்!

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சஷிகுமார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நான் குடித்துவிட்டு யாரிடமும் பிரச்சனை செய்யவில்லை என்றும் என்னை பற்றிய தவறான

டிரெண்ட் ஆகும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பது தெரிந்ததே.

10 லட்சம் வீடியோக்களை டெலிட் செய்த யுடியூப் நிறுவனம்....! காரணம் என்ன....?

கொரோனா குறித்த தவறான பதிவுகளை வெளியிட்டிருந்த, 10 லட்சம் யுடியூப் வீடியோக்களை டெலிட் செய்துள்ளது யுடியூப் நிறுவனம்.

முதல் அனுபவத்தை ஒப்பிடவே முடியாது: டான்சிங் ரோஸ்க்கு நன்றி கூறிய தனுஷ் நாயகி!

முதல்முறையாக எதையாவது செய்யும் போது ஏற்படும் சந்தோசத்தை ஒப்பிடவே முடியாது என்று கூறி 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீருக்கு நன்றி கூறி தனுஷ்

67 ரன்னில் சுருண்டும் நடந்த அதிசயம்... 3ஆவது டெஸ்ட் தொடர் பற்றிய வைரல் கதை!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது.