நடிகை சரண்யா மோகனின் க்யூட் குழந்தைகள்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தனுஷின் ‘யாரடி நீ மோகினி’ ’ஜெயங்கொண்டான்’ உள்பட சில படங்களில் நடித்த நடிகை சரண்யா மோகன், ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தளபதி விஜய்யின் ’வேலாயுதம்’ உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை சரண்யாமோகன் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து விலகி உள்ள சரண்யா மோகன் கணவர் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனாலும் அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வபோது அவர் பதிவு செய்யும் கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன நிலையில் தற்போது அவர் தனது இரண்டு கியூட் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.