நாயகியாக தயாராகும் விக்ரம் பட குழந்தை நட்சத்திரம்!

  • IndiaGlitz, [Wednesday,May 06 2020]

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கிய ’தெய்வத்திருமகள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதையும் கவர்ந்தவர் பேபி சாரா என்பது தெரிந்ததே. விக்ரமுக்கு இணையாக குறிப்பாக கிளைமாக்ஸ் நீதிமன்ற காட்சியில் விக்ரமையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருந்த பேபி சாராவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.

தெய்வத்திருமகள் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்திலும் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான ’சில்லுக்கருப்பட்டி’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பேபி சாராவாக இருந்தவர் தற்போது குமாரி சாராவாக மாறி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தான் நாயகியாக நடிக்க தயாராகி விட்டதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது குமாரி சாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் அவர் தமிழ் திரைப் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த இரண்டு மட்டும் தான் எனக்கு தெரியும்: நடிகர் செந்தில் விளக்கம்

பிரபல காமெடி நடிகர் செந்தில் நேற்று டுவிட்டரில் இணைந்ததாக செய்தி வெளியானது. இதனை செந்தில் ஒரு அறிக்கை மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

கொரோனாவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை பலனளிக்குமா??? உலகநாடுகளில் நடந்துவரும் ஆய்வுகள் என்ன!!!

கொரோனா நோயைக் குணப்படுத்துவதற்கு இதுவரை முழுமையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

கொரோனா பரிசோதனையில் தெர்மல் ஸ்கேன் எப்படி பயன்படுகிறது???

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் முதலில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப் படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் மட்டுமல்லாது,

மாரடைப்பால் தந்தை மரணம்: கனிமொழி எம்பி உதவியால் 1200 கிமீ பயணம் செய்த சென்னை ஐடி இளம்பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தந்தை மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென காலமான நிலையில்

சானிடைசர் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

கொரோனா தடுப்புக்காக உலகம் முழுவதும் சானிடைசர் பயன்படுத்துவோரின் அளவு அதிகரித்து இருக்கிறது.