மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்.. ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருடைய மனைவி மீது ரூபாய் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை ஒருவர் வழக்கு தொடர்ந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட திரை உலகின் ஜாம்பவான் ஆன ராஜ்குமார் வாரிசுகளில் ஒருவர் யுவராஜ் குமார். இவர் சமீபத்தில் ’யுவா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நிலையில் ஸ்ரீதேவி பைரப்பா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திடீரென தனது மனைவியை விட்டு பிரிவதாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீதேவி தன்னுடைய தரப்பில் இருந்து விளக்கம் அளித்த போது ’தனக்கும் தன்னுடைய கணவருக்கும் நல்ல உறவு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை ஒருவரால் தான் எங்கள் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது என்றும், அந்த நடிகையுடன் எனது கணவர் நெருக்கமாக இருந்ததை அடுத்து என்னை திட்டமிட்டு வெளிநாட்டுக்கு படிப்பதற்காக அனுப்பி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அவர்களது நெருக்கம் தெரிந்தும் வெளியே பேசாமல் அமைதி காத்து வந்த நிலையில் தான் என்னையே களங்கப்படுத்தும் வகையில் விவாகரத்து மனுவில் யுவா உண்மைக்கு புறமான விஷயங்களை கூறியிருப்பதால் நான் என்னால் சும்மா இருக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி கூறிய அந்த நடிகை சப்தமி என்று தெரிய வந்துள்ள நிலையில் அவர் தற்போது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். யுவா என்னுடைய சக நடிகர் மட்டுமே, அவருடன் வேறு எந்த விதமான உறவும் எனக்கு கிடையாது, ஆனால் ஸ்ரீதேவி என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக என் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார், எனவே அவர் எனக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை சப்தமி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com