உணவு திருடிய சாப்பிட்ட நபருக்கு ஆதரவு கொடுத்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோவில் தனியார் உணவு சப்ளை நிறுவன ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவினை பிரித்து சிறிதளவு சாப்பிட்டுவிட்டு பின் மீண்டும் பேக் செய்திருந்தார். இந்த வீடியோ, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது

இந்த நிலையில் இந்த ஊழியரின் செயலுக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் இது பசியின் கொடுமையால் ஏற்பட்ட தவறு என்றும் இதனை குற்றமாக கருத முடியாது என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்பட ஒருசிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அந்த ஊழியர் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை சஞ்சனா கல்ராணி, 'பசியால் செய்த தவறு ஒரு பெரிய குற்றமா? ஏன் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கக்கூடாது? உணவைத்தானே திருடி சாப்பிட்டார், அவர் என்ன அந்நிறுவனத்தின் சொத்தையா கொள்ளையடித்துவிட்டார். இவருக்கு இன்னொரு வாய்ப்பு அந்நிறுவனம் வழங்கவேண்டும். பசியால் செய்யும் தவறு குற்றமல்ல என்று அந்த நபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை சிறிதளவு சாப்பிட்டுவிட்டு, மீதத்தை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவரை மன்னித்து மீண்டும் வேலையில் சேர்த்தால் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இது டெலிவரி செய்தவர் சாப்பிட்டதன் மிச்சமா? என்ற கேள்வி எழும் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.