என் புருஷனை எனக்கு தெரியும், பொண்டாட்டி யாருன்னு விஜய்க்கு தெரியும்: ஒரு குழப்பமும் இலலை: நடிகை சங்கீதா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்யின் மனைவி பெயரும் சங்கீதா, உங்கள் பெயரும் சங்கீதா என்பதால் அந்த சமயத்தில் சில குழப்பமான செய்திகள் வந்ததே என்ற கேள்விக்கு நடிகை சங்கீதா பதில் அளித்துள்ள வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
’பூவே உனக்காக’ என்ற திரைப்படத்தில் விஜய்யுடன் சங்கீதா நடித்திருந்தார் என்பதும் அந்த படம் .மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அப்போது விஜய் அளித்த பேட்டியில் ’எனக்கு சங்கீதா மிகவும் பிடிக்கும் என்று கூறிய நிலையில் விஜய் மனைவி பெயரும் சங்கீதா என்பதால் குழப்பமான செய்திகள் ஊடகத்தில் வந்ததாக கூறப்படுவதுண்டு.
இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சங்கீதா கூறிய போது ’எனக்கு யாருடன் கல்யாணம் நடந்தது என்பது எனக்கு தெரியும், அதே போல் அவருக்கும் யாருடன் திருமணம் நடந்தது என்பது தெரியும், எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை, மற்றவர்களுக்கு வேண்டுமானால் அந்த குழப்பம் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்தபோது கூட நாங்கள் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை, அவர் ரொம்ப ரிசர்வ்ட் டைப் என்பதால் ஷாட் முடிந்ததும் அமைதியாக உட்கார்ந்துவிடுவார், நானும் பெரிதாக அவரிடம் பேசியது இல்லை என்று கூறினார்.
மேலும் நடிகை சங்கீதாவை எனக்கு பிடிக்கும் என்று அப்போது விஜய் பேட்டி அளித்திருந்ததாக நான் கேள்விப்பட்டேன். அவர் எதை மனதில் வைத்து அந்த பேட்டி அளித்துள்ளார் என்று எனக்கு தெரியாது என்றும் சங்கீதா கூறினார்.
மேலும் பொதுவாக சில பெயர்கள் காரணமே இல்லாமல் சிலருக்கு பிடித்து போகும், எனக்கு சரவணன் என்ற பெயர் ரொம்ப பிடிக்கும், சரவண பவன் உணவு உள்பட சரவணன் பெயரில் என்ன இருந்தாலும் எனக்கு பிடிக்கும் என்றும் அதேபோல் அவருக்கும் இருந்திருக்கலாம் என்றும் நடிகை சங்கீதா விளக்கம் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments