நடிகை சங்கீதா மகளா இவர்? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!
- IndiaGlitz, [Wednesday,February 24 2021]
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ’பிதாமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சங்கீதா. அதன் பின்னர் ’உயிர்’ என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினார். சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தபோது சங்கீதாவும் அந்த பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வரின் கையால் கலைமாமணி விருதைப் பெற்ற நடிகை சங்கீதா இதுகுறித்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் கணவர் மற்றும் மகளுடன் கலைமாமணி விருது உடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்து உள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு சங்கீதா மற்றும் கிருஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் 2012ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஷிவியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை தற்போது 9 வயதாகியுள்ள நிலையில் சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய பெண் குழந்தையா? என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
@krishoffl Can’t express in words for whatever u ve been & for what u r in my life . Thank u God ???????????? Love u Shivhiya https://t.co/XhAvnK3fQG pic.twitter.com/oR8UAXtWU7
— sangithakrish (@sangithakrish) February 22, 2021