செம்மர கடத்தல் வழக்கு. நடிகை சங்கீதா கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
செம்மரக்கடத்தலில் உடந்தையாக இருந்ததாக விமான பணிப்பெண்ணும் முன்னாள் நடிகையுமான சங்கீதா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தல் மன்னன் லட்சுமண் என்பவரின் காதலியும் முன்னாள் நடிகையுமான சங்கீதா விமானப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் லட்சுமணின் கடத்தல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளைக் கொல்கத்தாவிலிருந்தபடி சங்கீதா கவனித்து வந்துள்ளதாக தெரிகிறது.
லட்சுமண் கைது செய்யப்பட்டதும் அவரிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் ஆந்திர போலீசார் கொல்கத்தாவில் உள்ள சங்கீதாவின் வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் செம்மரக்கடத்தல் சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததால் நடிகை சங்கீதா கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதன் பின்னர் ஆந்திர நீதிமன்றத்தில் சங்கீதா தொடர்ந்து ஆறு முறை ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்படி ஆந்திர போலீசார் கொல்கத்தா சென்று சங்கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout