பாரம்பரிய உடை ஆனால் டிரெண்டிங் லுக்… ரசிகர்களை சொக்க வைக்கும் ஷனம் ஷெட்டி!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் 4 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகை ஷனம் ஷெட்டி. இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

சினிமா துறையில் “அம்புலி” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷனம் ஷெட்டி அதற்குப் பிறகு வெளியான ஒருசில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் பல திரைப்படங்களில் துணை கேரக்டராகவும் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை மிகவும் ஈர்த்த ஒரு பிரபலமாகவும் மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அதில் கலந்துகொண்ட இன்னொரு போட்டியாளர் தர்ஷனை ஏற்கனவே இவர் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில் இதுகுறித்த தகவல்கள் அப்போது ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டன.

தற்போது “எதிர்வினையாற்று“, “பார்த்திபன்” போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ஷனம் ஷெட்டி சமூக வலைத்தளப் பக்கங்களிலும் படு ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷுட் புகைப்படங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் கருப்பு நிற சேலை, இடையிடையே கோல்டன் கலரில் வடிவமைக்கப்பட்டு உள்ள உடையில் நடிகை ஷனம் ஷெட்டி பாரம்பரிய உடை அணிந்து இருந்தாலும் புது டிரெண்டிங் லுக் மற்றும் ஒரு போல்டான பெண்மணியாகக் காட்சித் தருகிறார். இதையடுத்து நடிகை ஷனம் ஷெட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.