சேவை செய்வதாக சினிமாவில் இருந்து விலகிய சிம்பு பட நடிகைக்கு திடீர் திருமணம்!

  • IndiaGlitz, [Sunday,November 22 2020]

கடவுளின் ஆணைக்கிணைங்க சேவை செய்ய போவதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் அறிவித்த சிம்பு பட நடிகை திடீரென திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ மற்றும் ’தம்பிக்கு இந்த ஊரு’ ’பயணம்’ ’ஆயிரம் விளக்கு’ ’தலைவன்’ மற்றும் விஷாலின் ’அயோக்யா’ உள்பட தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சனாகான் திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாகவும், மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்றப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென சனாகான் திருமணம் செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சனாகான் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்னர் சனாகான் தனது கணவருடன் மாடியில் இருந்து இறங்கி வரும் காட்சிகளும், இருவரும் கேக் வெட்டும் காட்சிகளும்  உள்ளன. இந்த திருமணம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

More News

திருந்த வாய்ப்பில்லை: மீண்டும் சர்ச்சைக்குரிய டைட்டில் வைத்த 'இரண்டாம் குத்து' இயக்குனர்!

தொடர்ச்சியாக அடல்ட் காமெடி திரைப்படங்களை இயக்கி வரும் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் 'இரண்டாம் குத்து' என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார்

காதலுக்கு விளக்கம் அளித்த பாலாஜி, குறுக்கிட்ட கமல்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 இன்றோடு 50 நாள் நிறைவு பெறுவதை அடுத்து இன்றைய முதல் புரோமோவில் அது குறித்த காட்சிகள் உள்ளன 

இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் உதவியிருக்கின்றோம்: கமல்ஹாசன்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியினர் உதவி செய்துள்ளனர் என்று கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 

நடிகர் ஜெய்யின் 'பிரேக்கிங் நியூஸ்' இணையத்தில் வைரல்!

'எங்கேயும் எப்போதும்' 'ராஜா ராணி' 'கலகலப்பு 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான இவர்

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைகிறது. இதனையடுத்து 50 நாளில் உங்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்க ஒவ்வொருவரும்