சேவை செய்வதாக சினிமாவில் இருந்து விலகிய சிம்பு பட நடிகைக்கு திடீர் திருமணம்!

  • IndiaGlitz, [Sunday,November 22 2020]

கடவுளின் ஆணைக்கிணைங்க சேவை செய்ய போவதால் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் அறிவித்த சிம்பு பட நடிகை திடீரென திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ மற்றும் ’தம்பிக்கு இந்த ஊரு’ ’பயணம்’ ’ஆயிரம் விளக்கு’ ’தலைவன்’ மற்றும் விஷாலின் ’அயோக்யா’ உள்பட தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்தவர் நடிகை சனாகான். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சனாகான் திடீரென தான் திரையுலகில் இருந்து விலகுவதாகவும், மனித குலத்திற்கு சேவை செய்யப்போவதாகவும், தன்னை படைத்தவனின் கட்டளையை பின்பற்றப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென சனாகான் திருமணம் செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சனாகான் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்னர் சனாகான் தனது கணவருடன் மாடியில் இருந்து இறங்கி வரும் காட்சிகளும், இருவரும் கேக் வெட்டும் காட்சிகளும்  உள்ளன. இந்த திருமணம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.