காயத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை.. அதே ஆக்ரோஷத்துடன் ஸ்டண்ட் காட்சி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சம்யுக்தா கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பில் காயம் அடைந்தார். அதன்பின்னர் குணமடைந்து மீண்டும் அதே ஸ்டண்ட் காட்சிகளில் ஆவேசமாக நடித்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, ‘கிரீம்’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பின் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து மிகுந்த கஷ்டப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில் சிகிச்சை மட்டுமின்றி மன வலிமையால் ஒரே ஆண்டில் குணமடைந்தார். அதன் பின் காயம் அடைந்த சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திலிருந்து மீண்டு வந்த சம்யுக்தா அதே ஆவேசத்துடன் நடித்த ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாக கூறிய படக்குழுவினர் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 1 என்று அறிவித்துள்ளனர்.
மேலும் சண்டை காட்சியின் போது காயமடைந்த காட்சி மற்றும் காயத்திற்கு பின் மீண்டு வந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ’இரண்டு வருட உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments