தமிழ் நடிகையின் பெற்றோருக்கு கொரோனா: ரெம்டிசிவிர் மருந்து தேவை என கோரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ ஜிவி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவருடைய பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் மேலும் தனது தந்தைக்கு ரெம்டிசிவிர் மருந்து தேவை என்றும் தனக்கு தொடர்பு உள்ளவர்களிடம் அந்த மருந்தை கேட்டுள்ளதாகவும் அந்த மருந்தை கிடைக்க உதவி செய்யவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோரை வீட்டில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம் என்றும் இருவரையும் தான் கவனித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த இக்கட்டான நிலையில் 100 நம்பருக்கு கால் செய்ததாகவும் ஆனால் அந்த நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாகவும் எனவே தயவு செய்து தனக்கு ரெம்டிசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்யவும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து பல ரசிகர்கள் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments