காயமடைந்த சம்யுக்தா ஹெக்டே எப்படி இருக்கிறார் பாருங்கள்: வைரல் புகைப்படம்

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படம் உள்பட பல படங்களில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில் படப்பிடிப்பின் போது காயமடைந்தார் என்றும், இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

நடிகை சம்யுக்தா ஹெக்டே கன்னட இயக்குனர் அபிஷேக் இயக்கி வரும் ’க்ரீம்’ என்ற படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவரது காலில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் தற்போது வீட்டில் சிகிச்சை வரும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இன்று காலை எழுந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் என்னை தொடர்ந்து காப்பாற்றுவதற்காக எனது குடும்பம் எனக்கு அருகில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!! என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் சம்யுக்தா தனது தந்தையின் அருகில் மகிழ்ச்சியுடன் இருப்பது போல உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.