வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. அனேகமாக இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகியுள்ளது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் உலக அளவில் பிரபலமானது என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
சர்வதேச பிரபலமான ஆடம் மோர்லே முதல் சிஎஸ்கேவின் டுவிட்டர் பக்கம் வரை ‘வாத்தி கம்மிங்’ பாடல் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவரது ஸ்டைலில் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
View this post on InstagramA post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on Oct 9, 2020 at 4:56am PDT