10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

தமிழ் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா போன்ற ஒருசில நடிகைகளை தவிர பெரும்பாலான நடிகைகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருப்பார்கள். அந்த வகையில் பத்து வருடத்திற்கு முன் நான் எப்படி அழகாக இருந்தேன் என்று ஆச்சரியப்படும் வகையில் ஒரு புகைப்படத்தை தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன்பின் ’வேட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி, திருமணம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள சமீரா ரெட்டி, ‘பத்து வருடத்திற்கு முன் நான் எப்படி இருக்கிறேன், மேக்கப் இல்லாமல் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். குட்டி டவுசரும், வெறும் பிளேசர் மட்டும் மேலாடையாக அணிந்திருந்த சமீராவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் விஷால் ஆர்யா நடித்து வரும் ’எனிமி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு சமீராரெட்டி ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது

More News

'மாஸ்டர்' முதல்நாள் முதல்காட்சி டிக்கெட்டை என்கிட்ட யாரும் கேட்காதீங்க: அர்ச்சனா கல்பாதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் பலமுறை உறுதி செய்து இருந்தனர்.

ஓடிடி ரிலீஸ் குறித்து 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்கில் தான் வெளியாகும்

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்!!!

கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கு வடகொரிய அரசு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறது.

எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து!!!

உலகமே கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கும்போது ஒருநாட்டின் அதிபர் மட்டும் எனக்கு கொரோனா தடுப்பூசி வேண்டாம் எனக் கூறியதோடு

நேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை!!!

பாகிஸ்தான் நாட்டில் திருநங்கை ஒருவர் கடுமையான உழைப்பினால் வழக்கறிஞரான பணியாற்றி வருகிறார்.