10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருக்கேன்: த்ரோபேக் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

தமிழ் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா போன்ற ஒருசில நடிகைகளை தவிர பெரும்பாலான நடிகைகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருப்பார்கள். அந்த வகையில் பத்து வருடத்திற்கு முன் நான் எப்படி அழகாக இருந்தேன் என்று ஆச்சரியப்படும் வகையில் ஒரு புகைப்படத்தை தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

சூர்யா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன்பின் ’வேட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டி, திருமணம், குழந்தை என்று செட்டில் ஆகிவிட்டார்

இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள சமீரா ரெட்டி, ‘பத்து வருடத்திற்கு முன் நான் எப்படி இருக்கிறேன், மேக்கப் இல்லாமல் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். குட்டி டவுசரும், வெறும் பிளேசர் மட்டும் மேலாடையாக அணிந்திருந்த சமீராவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் விஷால் ஆர்யா நடித்து வரும் ’எனிமி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு சமீராரெட்டி ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது