close
Choose your channels

கனவுக்கன்னியாக இருந்த சமீரா ரெட்டியா இவர்? லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

Wednesday, April 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனவு கன்னியாக இருந்தவரா இவர்? என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதன் பிறகு அவர் அஜித் நடித்த ’அசல்’, மாதவன் ஆர்யா நடித்த ’வேட்டை’ விஷால் நடித்த ’வெடி’ உள்பட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை நடிகை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2000ஆம் ஆண்டுகளில் கனவு கன்னியாக இருந்த சமீரா ரெட்டியா இவர்? என்று ஆச்சரியத்தில் கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment