திருமணநாளை குதூகலமாகக் கொண்டாடும் சூர்யா, அஜித் பட நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய 8 ஆவது திருமணநாளை இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடிவருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவந்த நடிகை சமீரா ரெட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “அசல்“ படத்தில் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து “நடுநிசிநாய்கள்“, “வெடி“, “வேட்டை“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்சய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதிகளுக்குத் தற்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர். மேலும் சமூகவலைத்தளப் பக்கங்களில் எப்போதும் பிசியாக இயங்கிவரும் நடிகை சமீரா வொர்க் அவுட், ஆரோக்கியம் குறித்த விஷயங்களையும் குழந்தை வளர்ப்பு குறித்த விஷயங்களையும் தொடர்ந்து அதில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது 8 ஆவது திருமண நாளை குதூகலமாகக் கொண்டாடிவரும் நடிகை சமீரா ரெட்டி தனது கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments