கணவர், குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்ற தமிழ் நடிகை: த்ரில் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

தமிழ் நடிகை ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுக்குள் சென்று ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன்பின்னர் அவர் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி கடந்த 2014ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சமீரா ரெட்டி திரை உலகிலிருந்து விலகி விட்டாலும் கணவர், குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பதும் அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மகிழ்ச்சியுடன் ஆட்டம்போடும் காட்சியுடன் கூடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவரது கணவரும் அவரும் மரத்தில் தொங்கி உள்ள காட்சியும் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

சட்டத்தின் உதவியோடு, ஸ்டோன் சுவாமியைப் படுகொலை செய்துள்ளது மோடி அரசு...! சீமான் கண்டன அறிக்கை....!

சமூகப்போராளி ஸ்டான் சுவாமி அவர்களை சட்டத்தின் உதவியுடன்,  ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளி,  படுகொலை செய்துள்ளது மோடி அரசு என சீமான் காட்டமாக கூறியுள்ளார்.

கோபா அமெரிக்க கால்பந்து கோப்பை- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பிரேசில்!

கொரோனா நேரத்தில் ரசிகர்கள் இன்றி 47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்த அனில் கும்ப்ளே… என்ன காரணம்?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சுழல்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்

கவர்ச்சி ஆட்டம், ஆபாச பேச்சு....! சில்மிஷ சிக்காவுடன் ரவுடி பேபி சூர்யா பிரபலமானது எப்படி....?

திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் சபரிநகரில் வசித்து வருபவர் தான் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி. டிக்டாக்-கில் ஆரம்ப காலத்தில் ஆடல், பாடல் வீடியோக்கள் பதிவிட்டு

நடிகர் கார்த்தி சந்திப்பு எதிரொலி: உடனடியாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின்!

மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்