வொர்க்-அவுட் செய்யும் சமந்தாவை தொந்தரவு செய்வது யார் தெரியுமா? வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,February 09 2022]

பிரபல நடிகை சமந்தா வொர்க் அவுட் செய்யும் போது அவருக்கு இடைஞ்சலாக இருக்கும் காட்சிகள் குறித்த வீடியோ தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் வெப்தொடர்களிலும் நடித்து பிஸியாக உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா வெளியிடும் வீடியோக்கள் வைரலாகி வரும் என்பதும் குறிப்பாக அவரது வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடையும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அவர் வொர்க்-அவுட் செய்து கொண்டிருக்கும் போது அவரது செல்ல பிராணிகள் அவருக்கு தொந்தரவு செய்கின்றன. இருப்பினும் அவர் அதனை கண்டு கொல்லாமல் விடா முயற்சியாக வொர்க்-அவுட் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.