'ஊ சொல்றியா' பாடலில் நடிக்கும்போது பயந்து நடுங்கினேன்.. நடிகை சமந்தா

  • IndiaGlitz, [Sunday,March 17 2024]

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த பாடலில் நடனமாட நடிகை சமந்தா ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை வாங்கியதாகவும் பரபரப்பான செய்திகள் அப்போது வெளியாகின.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா’ பாடலில் நடிக்கும் போது நான் பயந்து நடுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு புதிய விஷயம் என்பதால் ’ஊ சொல்றியா பாடலில் முதல் ஷாட்டை எடுக்கும் போது பயந்து நடுங்கினேன். எனக்கு அந்த பாடலில் நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது, அதனால் ஒரு நடிகையாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்காக தான் அந்த பாடலில் நான் நடித்தேன். ’தி ஃபேமிலி வேன் 2’ தொடரில் ராஜி என்ற கேரக்டரை எப்படி ஏற்று நடித்தேனோ, அதேபோலத்தான் ’ஊ சொல்றியா’ பாடலிலும் நடித்தேன்.

மேலும் ஒரு பெண்ணாக இருப்பதால் நான் சில சிரமங்களை சந்தித்து இருக்கிறேன். குறிப்பாக நான் அழகாக இல்லை, மற்ற பெண்களைப் போல் இல்லை என்று சில நேரம் நான் எனக்கு நானே கேள்வி எழுப்பி இருக்கிறேன், அதன் பிறகு என்னை கடினமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தி, அந்த சூழ்நிலையை கடந்து செல்லவும், போராடவும் நான் கற்றுக் கொண்டேன். ஒரு மனிதராகவும் நடிகையாகவும் நான் வளர்ந்திருப்பது காரணம் இதுதான்’ என்று சமந்தா கூறினார்.

More News

25 வருட கனவு இன்று நனவாகிறது.. இன்று முதல் பணியை தொடங்குகிறேன்: விஷால் வீடியோ வைரல்..!

25 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இன்று நினைவாகிறது என்று நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு!

பைரவர், சிவபெருமானின் கோப உருவமாக வணங்கப்படும் தெய்வம். தீய சக்திகளை விரட்டி, நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுபவர்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? குணநலன்கள், ஜாதகம், தீர்வுகள்!

இந்த ஆன்மீக Glitz வீடியோவில், ஜோதிடர் A.R. பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள், இந்திய ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் பற்றி விளக்குகிறார்.

தொடர்ந்து நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து நித்யா பாலாஜி எழுப்பிய கேள்விகள்.

இந்த சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரை சேர்ப்போம் என்று நினைக்கும்போது மிகவும் பதற்றமாக உள்ளது............

கமல் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்.. ஒரு சில மணி நேரத்தில் பாஜகவில் இணைப்பு..!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பெண் பிரபலம் ஒருவர் திடீரென விலகிய நிலையில் அதன் பின் ஒரு சில மணி நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில்