'ஊ சொல்றியா' பாடலில் நடிக்கும்போது பயந்து நடுங்கினேன்.. நடிகை சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த பாடலும் ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. மேலும் அந்த பாடலில் நடனமாட நடிகை சமந்தா ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை வாங்கியதாகவும் பரபரப்பான செய்திகள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா’ பாடலில் நடிக்கும் போது நான் பயந்து நடுங்கினேன் என்று தெரிவித்துள்ளார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு புதிய விஷயம் என்பதால் ’ஊ சொல்றியா பாடலில் முதல் ஷாட்டை எடுக்கும் போது பயந்து நடுங்கினேன். எனக்கு அந்த பாடலில் நடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது, அதனால் ஒரு நடிகையாக ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுவதற்காக தான் அந்த பாடலில் நான் நடித்தேன். ’தி ஃபேமிலி வேன் 2’ தொடரில் ராஜி என்ற கேரக்டரை எப்படி ஏற்று நடித்தேனோ, அதேபோலத்தான் ’ஊ சொல்றியா’ பாடலிலும் நடித்தேன்.
மேலும் ஒரு பெண்ணாக இருப்பதால் நான் சில சிரமங்களை சந்தித்து இருக்கிறேன். குறிப்பாக நான் அழகாக இல்லை, மற்ற பெண்களைப் போல் இல்லை என்று சில நேரம் நான் எனக்கு நானே கேள்வி எழுப்பி இருக்கிறேன், அதன் பிறகு என்னை கடினமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தி, அந்த சூழ்நிலையை கடந்து செல்லவும், போராடவும் நான் கற்றுக் கொண்டேன். ஒரு மனிதராகவும் நடிகையாகவும் நான் வளர்ந்திருப்பது காரணம் இதுதான்’ என்று சமந்தா கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments