சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலகுகிறாரா சமந்தா?

  • IndiaGlitz, [Tuesday,December 20 2022]

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அரியவகை நோயான மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாக கூறப்பட்டாலும் அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை மட்டும் முடித்து விட்டு சினிமாவுக்கு ஒரு நீண்ட இடைவெளி விட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்து வரும் ’குஷி’ என்ற படத்தை மட்டும் அவர் முடித்து விடுவார் என்றும் அவர் நடிக்க இருந்த ‘பேமிலிமேன் 2’ படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஒரு சில ஆண்டுகள் முழுமையாக ஓய்வு எடுத்து தனது உடல் நலத்தை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமந்தா முழுவதுமாக சினிலாவில் இருந்து விலகப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திக்கு சமந்தாவின் தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சமந்தா ஒரு இடைவெளிக்கு பின் மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரை உலகிற்கு வருவார் என்றும் அவருக்கான இடம் திரையுலகில் எப்போதுமே இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சமந்தா நடித்த ’யசோதா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் அனைத்து தரப்புக்கும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமந்தா நடித்து முடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிச்சைக்காரன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் மட்டுமின்றி

என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே.. சித்ரா குரலில் 'வாரிசு' பாடல்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 

'தளபதி 68' படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி? விஜய்யின் சம்பளம் மட்டும் இவ்வளவா?

 தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68வது படத்தின் பட்ஜெட் 400 கோடி என்றும் அதில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் கசிந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தங்க வயலில் 'தங்கலான்' டீம்.. மாஸ் காட்டிய விக்ரம்

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்'  திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கோலார் தங்க வயல் மற்றும் ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உதயநிதி அமைச்சரானதால் கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதேபோல் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின்