நடிகை சமந்தாவின் ஐந்து மொழி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை சமந்தா நடித்து முடித்துள்ள 5 மொழித் திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ’யசோதா’. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
ஹரிஷங்கர் மற்றும் ஹரி நாராயண் ஆகியோர் இயக்கி வரும் இந்த படத்தில் சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிஷர்மா இசையில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சமந்தாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Its Official Now@Samanthaprabhu2 gaaru starrer #Yasodha movie is going to release WorldWide on 12th August 2022#Samantharuthprabhu?? #SamanthaRuthPrabhuhot #samantha?? #SolidMovieStuff pic.twitter.com/fOLQyY4giy
— solidmoviestuff (@solidmoviestuff) April 5, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com