நடிகை சமந்தாவின் ஐந்து மொழி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 05 2022]

பிரபல நடிகை சமந்தா நடித்து முடித்துள்ள 5 மொழித் திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ’யசோதா’. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

ஹரிஷங்கர் மற்றும் ஹரி நாராயண் ஆகியோர் இயக்கி வரும் இந்த படத்தில் சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிஷர்மா  இசையில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சமந்தாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News

ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமா? 

நடிகர் பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ஆதிபுருஷ், சலார் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

'பீஸ்ட்' படத்தை தமிழத்திலும் தடை செய்ய வேண்டும்: முக்கிய அரசியல் கட்சி கோரிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இது எங்களின் தவறல்ல, ஆனாலும் சமாளிப்போம்: லாஸ்லியாவின் உணர்வுபூர்வ பதிவு!

இது எங்களுடைய தவறல்ல, ஆனாலும் நாங்கள் சமாளிப்போம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தனது சமூக வலைத்தளத்தில் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார். 

நாகசைதன்யாவின் வெற்றியை கொண்டாடிய சமந்தா: வைரல் புகைப்படம்!

பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த நிலையில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மூன்று வருட வெற்றியை கொண்டாடி உள்ள பதிவு வைரலாகி வருகிறது.

'தளபதி 66' படத்தின் நாயகி அறிவிப்பு: பிறந்த நாளில் கிடைத்த ஜாக்பாட்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில