உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் சக்தி இது ஒன்று தான்; லைக்ஸ்களை அள்ளும் சமந்தாவின் லேட்டஸ்ட் பதிவு

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் சக்தி இது ஒன்றுதான் என நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் இவர் சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட தற்போது குணமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அடிக்கடி ஆன்மீகப் பயணம் செய்வதில் சமந்தாவுக்கு ஈடுபாடு அதிகம் என்றும் அது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்வார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவையில்லை என்பதுதான் எனது கருத்து. நம்பிக்கை உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருக்கும், நம்பிக்கை உங்கள் ஆசிரியராகவும் நண்பராகவும் மாறும். மொத்தத்தில் நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சமந்தா நடித்த ’சாகுந்தலம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதேபோல் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடித்து வரும் ’குஷி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மாஸ் வீடியோவுடன் வெளியான 'மாவீரன்' அப்டேட்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது

எனது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர் தான்; ரகசியத்தை உடைத்த ரஜினிகாந்த்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு அவர் தனி கட்சி தொடங்குவார் என்றும் 2021 ஆம் ஆண்டு

ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷின் 'வாத்தி' எந்த ஓடிடியில் ரிலீஸ்? தேதி அறிவிப்பு..!

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும்

'குக் வித் கோமாளி', இந்த வார எலிமினேஷன் இவரா? கண் கலங்கிய புகழ், ஜிபி முத்து..! 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரினே, மைம் கோபி, விசித்ரா, ராஜ் அய்யப்பா,

சூப்பர் சிங்கர் ஜட்ஜ் பென்னி தயாள் மனைவியை பார்த்ததுண்டா? இதோ அழகிய புகைப்படங்கள்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருப்பவர் பென்னி தயாள் என்பதும்