அசத்தலான லுக்கில் நடிகை சமந்தா… வைரலாகும் போட்டோ ஷுட் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உடல்பாதிப்பில் இருந்து மீண்டுவந்த நடிகை சமந்தா தற்போது விறுவிறுப்பாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அதோடு தனக்குப் பிடித்தமான உடற்பயிற்சியை அசராமல் செய்து வீடியோ மூலம் ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புது போட்டோ ஷுட் புகைப்படம் சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
“யசோதா”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்திற்குப் பிறகு நடிகை சமந்தாவிற்கு பாலிவுட் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் சிட்டாடல் வெப் தொடரில் அவர் கலந்து கொண்டுவருகிறார். மேலும் புராணக்கதைத் தொடர்பாக இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் “சாகுந்தலம்” திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்து வரும் “குஷி” படத்தின் படப்பிடிப்பும் சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என்று பிசியாக நடித்துவரும் நடிகை சமந்தா தொடர்ந்து சமூகவலைத் தளங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான ஓவர் கோட் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்திருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு ஹாலிவுட் லுக்கில் இருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
உடல்பாதிப்பு காரணமாக தொடர்ந்து 4 மாதங்கள் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாத நடிகை சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ சமீபத்தில் வெளியாகியது. இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் மன தைரியத்தைப் பாராட்டி வந்தனர். இந்நிலையில் மார்டன் உடை மற்றும் கண்ணாடி அணிந்திருக்கும் இவரின் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமந்தா மீண்டும் பழைய பார்ஃமிற்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments