கருக்கலைப்பு, காதலன், சந்தர்ப்பவாதி: சமந்தாவின் அதிரடி பதிவு!

  • IndiaGlitz, [Friday,October 08 2021]

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

ஒருசில சமூக ஊடகங்களில் சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பதை அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் செய்திகள் வெளியிட்டு வருவதால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன் மீது பரப்பப்படும் வதந்திகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் சமந்தா அதிரடியாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் ’தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பொய்யாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக என்னைப் பாதுகாத்த அனைவருக்கும் நன்றி.

எனக்கு இன்னொரு காதலன் இருப்பதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதை நான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும், நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் கூறி வதந்தியை பரப்பியவர்கள் தற்போது எனக்கு கருக்கலைப்பு நடந்து உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

விவாகரத்து என்பது ஒரு வேதனையான விஷயம். எனவே அதில் இருந்து குணமடைய எனக்கு கால அவகாசம் தேவை. எனக்காக நேரம் ஒதுக்கி வதந்திகளை பரப்ப வேண்டாம். ஆனால் இந்த தாக்குதல் இடைவிடாமல் நடந்தாலும், நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். இந்த வதந்திகளை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். முடிந்தால் என் மன உறுதியை உடைத்து பாருங்கள்’ என்று சமந்தா கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.