நடிகை சமந்தா மோடி ஆதரவாளரா? அவரே பேசிய வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தான் ஒரு மோடி ஆதரவாளர் என அவரே பேசிய வீடியோ திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா அதன்பிறகு விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா, ‘யசோதா’, ‘சாகுந்தலம்’, ‘குஷி’ ஆகிய மூன்று திரைப்படங்களில் நடிகை சமந்தா நடித்து வருகிறார் என்பதும் இதில் இரண்டு படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபகாலங்களில் அளித்த பேட்டியில், தான் மோடி ஆதரவாளர் என்று கூறிய வீடியோ திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், ‘நான் எப்போதுமே மோடி அவர்களின் ஆதரவாளர் என்றும் அவரது செயல்பாடுகள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து உள்ளது என்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மோடி நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்வார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த வீடியோவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
Just another Reason to Love @Samanthaprabhu2 ???? pic.twitter.com/ZjdTRVlR2n
— Amit Kumar (@AMIT_GUJJU) September 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments