close
Choose your channels

பாட்டு, இசை, சிற்பம், கடற்கரை, ஐஸ்க்ரீம் .. இந்தோனேஷியாவை அணுஅணுவாக ரசிக்கும் சமந்தா.. வைரல் வீடியோ..!

Monday, July 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா சமீபத்தில் இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி என்ற பகுதிக்கு தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கிருந்து கொண்டே அவர் சில புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பூமியின் சொர்க்கம் என்று கூறப்படும் சூரிய உதயத்தை அவர் வீடியோ எடுத்து பதிவு செய்திருந்தார் என்பதும் அதேபோல் 4 டிகிரி குளிரில் ஆறு நிமிடங்கள் ஐஸ் பாத் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் நகர் இந்தோனேசியா நாட்டில் உள்ள கடற்கரை அழகு, அங்கு இசை நிகழ்ச்சி, மற்றும் உணவுகள், கடற்கரையின் எழில் மிகுந்த காட்சிகள் ஆகியவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவு செய்துள்ளார்.

அதேபோல் இந்தோனேசியாவில் உள்ள சிற்பக் கலையின் மகிமை குறித்து அவர் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். மேலும் அவர் அங்கு உள்ள ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் செய்த நிலையில் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இருந்து அவர் இந்தோனேஷியாவை அணு அணுவாக ரசித்து வருகிறார் என்பது தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment