கோவா திரைப்பட விழாவில் மேஜிக் குயின் நடிகை சமந்தா… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினர் பிரிவில் உரையாடல் நிகழ்த்துவதற்காக நடிகை சமந்தா அழைக்கப்பட்டு இருந்தார். தென்னிந்திய அளவில் நடிகை ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இந்த அழைப்பு கருதப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட நடிகை சமந்தா பற்றிய புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கோவாவில் 52ஆவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுவது வழக்கம். மேலும் பிரபலங்கள் சிலர் இந்த விழாவில் கலந்துகொண்டு தங்களது சினிமா அனுபவம் மற்றும் விமர்சனம் குறித்து உரையாடல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சமந்தாவும் சிறப்பு விருந்தினர் பிரிவில் உரையாடுவதற்காக அழைக்கப்பட்டு இருந்தார். அவர் “தி ஃபேமிலி மேன்2“ சீரிஸ் குழுவினரோடு நடிகை சமந்தா இந்த விழாவில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவின்போது அவர் உடுத்தியவந்த உடை தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அடர்ந்த சிவப்பு நிறத்தில் நடிகை சமந்தா கவுன் போன்ற ஆடையை உடுத்தியிருந்தார். அதில் ஒரு பக்கம் பிளவைக் கொண்டு பார்ப்பதற்கு க்யூட்டான தோற்றத்தில் இந்த உடை அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்த இந்தப் புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 7 லட்சத்தைத் தாண்டி லைக்ஸ்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments