சமந்தாவுடன் இணைத்து வதந்தி: மனம் திறந்த ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகால்கர்!

  • IndiaGlitz, [Tuesday,October 12 2021]

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து முடிவை அறிவித்த பின்னர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும், சமந்தாவுக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் வதந்திகள் பரவிய நிலையில் இது குறித்து சமந்தா விளக்கம் அளித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது சமந்தாவுடன் இணைத்து அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகால்கருடன் நெட்டிசன்கள் வதந்தியை கிளம்பி வருவதுடன் அவருக்கு மிரட்டல் விடுத்தும் வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரீத்தம் ஜூகால்கர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். நான் சமந்தாவை எப்போதும் ஜிஜி என்று தான் அழைப்பேன். வட இந்தியாவில் ஜீஜி என்றால் சகோதரி என்று அர்த்தம். அது மாதிரி உறவில் தான் நாங்கள் இருவரும் பழகினோம்

ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. நாங்கள் இருவரும் எப்படி பழகினோம் என்பது நாக சைதன்யாவுக்கு மிகவும் நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவர் மீது குறித்து மௌனமாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்து இருந்தார்

சமந்தா மட்டுமின்றி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரகுல் ப்ரீத்திசிங், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், ராணா டகுபதி உள்பட பலருக்கும் இவர்தான் ஸ்டலிலிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.